ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க், சேமிப்பு கணக்குகளுக்கு, முகத்தோற்றத்தின் அங்கீகார சரிபார்ப்பை (FaceID Authentication) அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இயங்கும் 5 லட்சம் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி முனையங்களில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசின் பிரத்யேக செயலி மூலம் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் அனுப்ரதா பிஸ்வாஸ், “முகத்தோற்ற அங்கீகாரம் கொண்டு வரப்படுவதால் முறைகேடுகள் பெருமளவு தவிர்க்கப்படும்” என்று கூறினார். வாடிக்கையாளரின் முகத்தோற்றம், ஆதார் அட்டையில் உள்ள முகத்தோற்றத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும் எனவும் கூறினார். இந்திய அரசின் UIDAI இது தொடர்பான உதவிகளை செய்யும் எனவும் தெரிவித்தார். நாட்டிலேயே முதல் முறையாக முகத்தோற்ற அங்கீகாரம் மூலம், வாடிக்கையாளர் தரவுகளை சரி பார்க்கும் முறை ஏர்டெல் வங்கியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.