நிலவு மேற்பரப்பின் அருகாமைத் தோற்றம் - ஓரியன் விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

November 25, 2022

நாசாவின் ஆர்டெமிஸ் 1 திட்டத்தின் மூலம், நிலவுக்கு அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம், நிலவு மேற்பரப்பின் அருகாமைத் தோற்றத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. நிலவில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஓரியன் விண்கலத்தில் உள்ள ஆப்டிகல் நேவிகேஷன் சிஸ்டம் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், கருப்பு வெள்ளையில் உள்ளது. நிலவு மேற்பரப்பில் எடுக்கப்பட்ட 4 புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. ஓரியனுக்கு முன்னதாக நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்போலோ விண்கலம் தரையிறங்கிய பகுதிகளின் புகைப்படங்களையும் […]

நாசாவின் ஆர்டெமிஸ் 1 திட்டத்தின் மூலம், நிலவுக்கு அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம், நிலவு மேற்பரப்பின் அருகாமைத் தோற்றத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. நிலவில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஓரியன் விண்கலத்தில் உள்ள ஆப்டிகல் நேவிகேஷன் சிஸ்டம் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், கருப்பு வெள்ளையில் உள்ளது. நிலவு மேற்பரப்பில் எடுக்கப்பட்ட 4 புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. ஓரியனுக்கு முன்னதாக நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்போலோ விண்கலம் தரையிறங்கிய பகுதிகளின் புகைப்படங்களையும் நாசா வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்களில், நிலவின் மேற்பரப்பில் விண்கல் மோதலால் ஏற்பட்டுள்ள பல்வேறு மேடு பள்ளங்கள் தெளிவாக பதிவாகியுள்ளன. இது நிலவு குறித்த ஆராய்ச்சியை அடுத்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu