தமிழ்நாட்டில் 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 5ஜி மற்றும் 4ஜி ரேடியோ உபகரணங்கள் தயாரிப்புக்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது.
அரசாங்கத்தின் பிஎல்ஐ (PLI) திட்டத்தில் சாம்சங் இணைந்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் தொலை தொடர்பு தயாரிப்புகளுக்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக, நோக்கியா மற்றும் ஜபில் (எரிக்சன்) நிறுவனங்களுடன் சாம்சங் கைகோர்த்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள உற்பத்தி ஆலையில் 5ஜி மற்றும் 4ஜி ரேடியோ உபகரணங்கள், இந்த முதலீட்டின் வாயிலாக தயாரிக்கப்பட உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் 5ஜி உபகரணம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.