தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஒவ்வொரு வாரமும் 3 டன் அளவிற்கு பன்றிகள் அனுப்பப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய பன்றிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் கேரள அரசு வரும் ஜனவரி 14-ம் தேதி முதல் தற்காலிகமாக தமிழகத்தில் இருந்து பன்றிகள் கொண்டுவரக்கூடாது என தடை விதித்துள்ளது .
அதனை கண்டித்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பன்றி பண்ணை விவசாயிகள் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் பன்றி பண்ணை வியாபாரம் அதிகளவு அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகள் அனுப்ப முடியாததால் பல கோடி அளவிற்கு வர்த்தக இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.