டெல்லி எய்ம்ஸ் சர்வர் 6வது நாளாக முடக்கம் - 200 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி கேட்கும் ஹேக்கர்கள்

November 29, 2022

டெல்லி எய்ம்ஸ் சர்வர் தொடர்ந்து 6வது நாளாக முடக்கப்பட்டுள்ளது. இதனை ஹேக் செய்த ஹேக்கர்கள், 200 கோடி ரூபாய் மதிப்பில் கிரிப்டோ கரன்சியை கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், 3 - 4 கோடி நோயாளிகளின் தரவுகள் திருடு போயிருக்கலாம் என்று மருத்துவமனை அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மருத்துவமனை சர்வரில், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பெரும்புள்ளிகளின் உடல்நிலை விவரங்கள் பதிவாகி இருந்தன. இது தொடர்பாக, டெல்லி காவல்துறை, உள்துறை அமைச்சக பிரதிநிதிகள் மற்றும் […]

டெல்லி எய்ம்ஸ் சர்வர் தொடர்ந்து 6வது நாளாக முடக்கப்பட்டுள்ளது. இதனை ஹேக் செய்த ஹேக்கர்கள், 200 கோடி ரூபாய் மதிப்பில் கிரிப்டோ கரன்சியை கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், 3 - 4 கோடி நோயாளிகளின் தரவுகள் திருடு போயிருக்கலாம் என்று மருத்துவமனை அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மருத்துவமனை சர்வரில், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பெரும்புள்ளிகளின் உடல்நிலை விவரங்கள் பதிவாகி இருந்தன.

இது தொடர்பாக, டெல்லி காவல்துறை, உள்துறை அமைச்சக பிரதிநிதிகள் மற்றும் இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழு ஆகியவை இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன. அதே வேளையில், எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையம், ஆன்டிவைரஸ் கொண்டு முழுமையாக சீரமைக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக உள்ள 5000 கணினிகளில், 1200 கணினிகள் இதுபோன்று மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. மேலும், 50 சர்வர்களில் 20 சர்வர்கள் மீட்கப்பட்டுள்ளன. முழுமையாக, சீரமைப்பு பணிகள் நிறைவேற இன்னும் 5 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu