உத்தர பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 6 வயது குழந்தை மீட்பு

January 11, 2023

உத்தர பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 6 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் ஹாப்புர் பகுதியில் உள்ள கொட்லா சதத் என்ற பகுதியில் சுமார் 55 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் 6 வயது ஆண் குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், குழந்தையை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் சுமார் 5 மணி நேர […]

உத்தர பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 6 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் ஹாப்புர் பகுதியில் உள்ள கொட்லா சதத் என்ற பகுதியில் சுமார் 55 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் 6 வயது ஆண் குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், குழந்தையை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தையை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu