கேரளாவை சேர்ந்த 63 வயது பெண் உலக பவர் லிப்டிங் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலபுழா பகுதியை சேர்ந்த ரெனி கடந்த ஆண்டுகளுக்கு முன்பு ஜிம்மிற்கு சென்றார். இதனை அடுத்து பவர் லிப்டிங் போட்டிகளில் பங்கேற்க தயாராகினார். தனது 59வது வயதில் பவர் லிப்டிங் பயிற்சி தொடங்கி பின்னர் இதில் பங்கேற்பதற்கான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இதன் காரணமாக தனது 63 வயதில் மங்கோலியாவில் நடந்த சர்வதேச மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கத்தை வென்று தற்போது சாதனை படைத்துள்ளார். இவர் 61 முதல் 70 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டியில் 44 நாடுகளை சேர்ந்த 145 பேர் கலந்து கொண்ட போட்டியில் ரெனி வெற்றி பெற்றுள்ளார் மேலும் இவர் ஆலப்புழாவில் நடந்த ஆசிய பவர் லிப்டிங் போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார்.