இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திருத்தச் சட்டத்திற்கு பாட்னா ஐகோர்ட் அரசு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பீகாரில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பீகாரில் அமலில் இருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்படும் என பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்து இருந்தார். பின்னர் முதல் மந்திரி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் பாட்னா ஐகோர்ட்டில் அரசு வேலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உயர்வு தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது .இருதரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீத முதல் 65 சதவீதம் வரை உயர்த்தும் பீகார் அரசின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது














