காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பாஜக அரசின் 10 ஆண்டுகால தோல்விகள் குறித்து கருப்பு அறிக்கையை இன்று தாக்கல் செய்தார்.
பாராளுமன்றத்தில் மத்திய அரசு காங்கிரஸ் தலைமையிலான 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய மற்றும் மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தது. அதன்படி இன்று மத்திய மந்திரி நிர்லா சீதாராமன் இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய இருந்தார். மேலும் அதன் பின்பு விவாதம் நடைபெற்று ஓட்டெடுப்பு நடத்தப்படுவதாக இருந்தது. இந்நிலையில் பாஜக அரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் தோல்விகள் குறித்து கருப்பு அறிக்கை வெளியிட காங்கிரஸ் திட்டமிட்டது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று கருப்பு அறிக்கையை வெளியிட்டார்.














