கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்

February 5, 2024

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தற்போது மக்களுக்கு பயன் தரும் வகையில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கும் பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பொது மக்களின் வசதியை மேம்படுத்தவும்,கூட்ட நெரிசலை குறைக்கவும் 20 கோடி ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு இங்கு ரயில் […]

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தற்போது மக்களுக்கு பயன் தரும் வகையில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கும் பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பொது மக்களின் வசதியை மேம்படுத்தவும்,கூட்ட நெரிசலை குறைக்கவும் 20 கோடி ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு இங்கு ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்தின் எதிர்புறம் நடை மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.தற்போது இங்கு பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக மலிவு விலை உணவகங்கள், ஏடிஎம் மையங்கள் ஆகியவை திறக்கப்பட உள்ளன. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu