பஞ்சாப் எல்லையில் சீனாவின் டிரோன் சிக்கியுள்ளது.
பஞ்சாபின் பசில்கா மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் ஒன்று மீட்கப்பட்டு உள்ளது. 24 மணி நேர இடைவெளிக்குள் மீட்கப்பட்ட 2-வது டிரோன் இதுவாகும். எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் இணைந்து பசில்கா பகுதியில் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டை நடத்தியபோது இந்த மா்ம டிரோனை திறந்த வெளியில் கண்டுபிடித்தனர். இது சீனாவில் தயாரிக்கப்பட்ட டி.ஜே.ஐ. மாட்ரைஸ் 300 ஆர்.டி.கே. என்ற வகை டிரோனாகும்.