விண்வெளியில் திருமணம் செய்ய ரூ.1 கோடி கட்டணம்

May 19, 2023

விண்வெளியில் திருமணம் செய்ய ரூ.1 கோடி கட்டணமாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் விண்வெளியில் திருமணம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கார்பன் நியூட்ரல் பலூன்களில் இணைக்கப்பட்ட பிரத்யேக கேப்ஸ்யூல்களில் தம்பதிகள் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேன் பாய்ண்டர் தெரிவித்துள்ளார். இதற்கு கட்டணமாக ரூ.1 கோடி ($125,000) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. […]

விண்வெளியில் திருமணம் செய்ய ரூ.1 கோடி கட்டணமாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் விண்வெளியில் திருமணம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கார்பன் நியூட்ரல் பலூன்களில் இணைக்கப்பட்ட பிரத்யேக கேப்ஸ்யூல்களில் தம்பதிகள் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேன் பாய்ண்டர் தெரிவித்துள்ளார். இதற்கு கட்டணமாக ரூ.1 கோடி ($125,000) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு தொடங்கவுள்ள இத்திட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் இப்போதே தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். கார்பன் நியூட்ரல் பலூன்கள் புதுப்பிக்கத்தக்க ஹைட்ரஜனில் இயங்கக் கூடியவை என்பதால் அவை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானவை என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu