இஸ்ரோ நிறுவனம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண் விண்வெளி வீராங்கனைகளை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இஸ்ரோ நிறுவனம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோதனையை கடந்த 21 ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தியது. இதனை அடுத்து இன்னும் சில மாதங்களில் அடுத்தடுத்த சோதனை பணிகள் வரிசைப்படுத்தி நடக்க உள்ளன.இதில் குறிப்பாக ஐ ஐ எஸ் யூ வடிவமைத்து உருவாக்கிய வியோமித்ரா என்ற பெண் ரோபோ விண்வெளியில் உள்ள சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பி சோதனை நடத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த சோதனையில் பெண் விண்வெளி வீராங்கனைகளை அனுப்புவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. மேலும் 2040 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவது உட்பட இந்தியாவிற்கான லட்சிய விண்வெளி பயண இலக்குகளில் முதன்மையானதாக இந்த திட்டம் இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.














