மெட்ரோ பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பெண்களே இயக்கும் இணைப்பு வாகன வசதியை அறிமுகப்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது தினமும் 2.10 லட்சம் முதல் 2.50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி பெண்களே இயக்கும் இணைப்பு வாகன வசதி கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக, தனியார் நிறுவனத்துடன் பேசி வருகிறோம். பெண்களே இயக்கும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பெண் பயணிகள் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று
மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.