17ம் தேதி திறக்க இருந்த தெலங்கானா தலைமை செயலகத்தில் தீ விபத்து

February 4, 2023

தெலங்கானா தலைமை செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஹூைசைன் சாகர் அருகே கடந்த 2021ம் ஆண்டு முதல் ரூ.600 கோடியில் 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமை செயலக கட்டிடம் மாநில அரசு சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு நேற்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 11 தீயணைப்பு வாகனத்துடன் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். புதிய தலைமை செயலகம் முதல்வர் […]

தெலங்கானா தலைமை செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஹூைசைன் சாகர் அருகே கடந்த 2021ம் ஆண்டு முதல் ரூ.600 கோடியில் 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமை செயலக கட்டிடம் மாநில அரசு சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு நேற்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 11 தீயணைப்பு வாகனத்துடன் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். புதிய தலைமை செயலகம் முதல்வர் சந்திரசேகரராவின் பிறந்த நாளான வருகிற 17ம் தேதி திறக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu