சென்னை விமான நிலையத்தில் ஒரே விமானத்தில் பயணம் செய்த 156 பேரில் 149 பேர் கடத்தல்காரர்கள் என கண்டறியப்பட்டது.
சென்னையில் விமானம் மூலம் கடத்தல் கும்பல் வந்துள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்ததை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் ஓமனிலிருந்து வந்த விமானத்தை சோதனை செய்தனர். அப்போது ஒரே விமானத்தில் பயணித்த 156 பேரில் 149 பேர் கடத்தல்காரர்கள் என்று தெரிய வந்துள்ளது. அந்த ஏழு பேர் மட்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த பயணிகள் மற்ற அனைவரும் கடத்தல் கும்பலை சேர்த்தவர்கள் ஆவர். இந்த சோதனையில் 11 கிலோ தங்கம், 2500-க்கும் மேற்பட்ட செல்போன்கள், குங்குமப்பூ உள்ளிட்டவை இந்த கும்பல்கள் கடத்தி வந்துள்ளன. இவர்கள் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது .மேலும் கடத்தல் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.