ஆவின் பச்சை, ஆரஞ்சு நிற பால் நிறுத்தம்

October 17, 2023

நான்கு மாவட்டங்களில் ஆவின் பச்சை நிற, ஆரஞ்சு நிற பால் பாக்கெட் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டங்களை சந்தித்து வருவதால் வெவ்வேறு பெயர்கள் வைத்து பால் விநியோகம் செய்து வருகிறது. இதில் பச்சை நிற பால் பாக்கெட் 4.5% கொழுப்பு சத்துடன் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 1% கொழுப்பு சத்தை நீக்கி விட்டு 3.5 சதவீதமாக ஆவின் டிலைட் என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இதேபோல் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் […]

நான்கு மாவட்டங்களில் ஆவின் பச்சை நிற, ஆரஞ்சு நிற பால் பாக்கெட் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டங்களை சந்தித்து வருவதால் வெவ்வேறு பெயர்கள் வைத்து பால் விநியோகம் செய்து வருகிறது. இதில் பச்சை நிற பால் பாக்கெட் 4.5% கொழுப்பு சத்துடன் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 1% கொழுப்பு சத்தை நீக்கி விட்டு 3.5 சதவீதமாக ஆவின் டிலைட் என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது.
இதேபோல் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் ஆறு சதவீதமாக இருந்த கொழுப்பு சத்து ஐந்து சதவீதமாக குறித்து மஞ்சள் நிற பாக்கெட்டில் ஆவின் கோல்ட் என விற்கப்பட்டு வருகிறது. தற்போது வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் பச்சை, ஆரஞ்சு நிற பால் பாக்கெட் நிறுத்தப்பட்டு புதிய பாக்கெட்டுகள் விநியோகப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மேலும் சென்னையில் ஊதா நிற பாக்கெட் மட்டும் விநியோகிக்க போவதாக தெரிய வந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu