பிரதமருக்கு நவீன வசதிகளுடன் ரூ.360 கோடியில் வீடு உருவாகிறது

October 7, 2022

பிரதமருக்காக ரூ.360 கோடியில் நவீன வசதிகளுடன் புதிய இல்லம் உருவாகிறது. பிரதமருக்கு ரூ.360 கோடியில், சுமார் 21,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய பிரமாண்ட வீடு கட்டுவதற்கு, மத்திய அரசு முடிவு செய்து டெண்டர் வெளியிட்டுள்ளது. பிரதமரின் இல்லம் 2 தளங்களை கொண்டதாக அமைய இருக்கிறது. புதிய குடியிருப்பு வளாகத்தின் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல் தளம் மற்றும் விருந்தினர் இல்லம், சிறப்பு பாதுகாப்பு குழு அலுவலகம், துணை பணியாளர்கள் குடியிருப்பு, புதிய இல்லம் மற்றும் […]

பிரதமருக்காக ரூ.360 கோடியில் நவீன வசதிகளுடன் புதிய இல்லம் உருவாகிறது.

பிரதமருக்கு ரூ.360 கோடியில், சுமார் 21,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய பிரமாண்ட வீடு கட்டுவதற்கு, மத்திய அரசு முடிவு செய்து டெண்டர் வெளியிட்டுள்ளது. பிரதமரின் இல்லம் 2 தளங்களை கொண்டதாக அமைய இருக்கிறது. புதிய குடியிருப்பு வளாகத்தின் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல் தளம் மற்றும் விருந்தினர் இல்லம், சிறப்பு பாதுகாப்பு குழு அலுவலகம், துணை பணியாளர்கள் குடியிருப்பு, புதிய இல்லம் மற்றும் மத்திய பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 4 நுழைவு, வெளியேறும் வாயில்கள் மற்றும் 25 கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட இருக்கிறது.

பிரதமரின் இல்ல வளாகம், ராஷ்டிரபதி பவன் மற்றும் சவுத் பிளாக்கிற்கு அருகேயும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனக் கட்டிடத்திற்கு எதிரிலும் தாரா ஷிகோ ரோடு, புது டெல்லியில் அமைக்கப்பட இருப்பதாக மத்திய பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. இதனை 21 மாதங்களுக்குள் கட்டி முடிக்க தகுதியான நிறுவனங்களுக்கு மட்டும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu