சென்ட்ரல் சதுக்கத்தில் பிரம்மாண்ட கட்டடம் - சென்னை மெட்ரோ நிறுவனம் திட்டம்

September 29, 2023

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்ட்ரல் சதுக்கத்தில் 27 மாடி கட்டிடம் கட்ட திட்டமிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சென்ட்ரல் சதுக்கம் அமைக்கப்பட்டது. இது சென்னை நகரின் அடையாளமாக மாறியுள்ளது. இது புறநகர் ரயில்வே, மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் மக்கள் எளிதாக செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் அங்கு விரைவில் 27 மாடி கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இதில் […]

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்ட்ரல் சதுக்கத்தில் 27 மாடி கட்டிடம் கட்ட திட்டமிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சென்ட்ரல் சதுக்கம் அமைக்கப்பட்டது. இது சென்னை நகரின் அடையாளமாக மாறியுள்ளது. இது புறநகர் ரயில்வே, மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் மக்கள் எளிதாக செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் அங்கு விரைவில் 27 மாடி கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக எட்டு நிலைகளுடன் கூடிய பிரம்மாண்ட வாகன நிற்கும் இடம் தயாராக உள்ளது. இதில் 1500 இருசக்கர வாகனங்கள் மற்றும் 400 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1900 வாகனங்கள் நிறுத்தும் விதமாக கட்டப்பட உள்ளது. உங்க முதலில் 33 அடுக்கு கட்டிடத்தை கட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில் அது 31 மாடி கட்டிடமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் மாடிக்கு பதிலாக இரட்டை கோபுர கட்டிடங்களை கட்டலாம் என முடிவு செய்தனர். அதன்படி முதல் கட்டிடம் 17 தளங்களையும், மற்றொன்று ஏழு தளங்களையும் கொண்டதாகவும் கட்டப்பட இருந்தது. இந்நிலையில் இதுவும் சிக்கலாக இருக்கவே 27 மாடிகளை கொண்ட ஒரே கட்டடமாக கட்ட தற்போது முடிவு செய்துள்ளனர். வருங்காலத்தில் ஏற்படும் வாகன நெருக்கடியை குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu