ரூ.1000 கோடியில் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கு நில ஒதுக்கீட்டு ஆணை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் ஃபூ தொழில் குழுமம் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டது. அது நேற்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் ஃபூ தொழில் குழுமத்தின் நிறுவனத் தலைவர் திரு. டி. ஒய். சங்க் அவர்களிடம் வழங்கப்பட்டது.
இத்தொழிற்சாலை அமைவதன் மூலம் சுமார் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.