விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடமாடும் வாகனம்

விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட நடமாடும் போக்குவரத்து வாகனம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விபத்து உயிரிழப்பு மற்றும் வாகன நெரிசலை முற்றிலும் கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. களத்தில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் கையடக்க கருவி மூலம் நேரடியாக அபராதம் விதிக்கின்றனர். மேலும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டு […]

விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட நடமாடும் போக்குவரத்து வாகனம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விபத்து உயிரிழப்பு மற்றும் வாகன நெரிசலை முற்றிலும் கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. களத்தில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் கையடக்க கருவி மூலம் நேரடியாக அபராதம் விதிக்கின்றனர். மேலும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது சென்னை போக்குவரத்து காவல் துறையில், ‘இடைமறிப்பான் (Interceptor)’ என்ற நவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu