சர்வதேச வேலைவாய்ப்பு முகாமில் புதிய சாதனை

September 19, 2023

சர்வதேச வேலைவாய்ப்பு முகாமில் ஐ ஐ டி மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூபாய் 3.7 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதுமும்பையில் ஆண்டுதோறும் ஐஐடி நிறுவனத்தில் கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறும். இதில் ஐஐடி பாம்பே கல்லூரியில் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பத் துறை சேர்ந்த அதிகப்படியான மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ச்சி அடைவர். அதேபோல் இந்த ஆண்டும் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஹாங்காங், மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாம் […]

சர்வதேச வேலைவாய்ப்பு முகாமில் ஐ ஐ டி மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூபாய் 3.7 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதுமும்பையில் ஆண்டுதோறும் ஐஐடி நிறுவனத்தில் கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறும். இதில் ஐஐடி பாம்பே கல்லூரியில் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பத் துறை சேர்ந்த அதிகப்படியான மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ச்சி அடைவர். அதேபோல் இந்த ஆண்டும் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஹாங்காங், மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தினர். இதில் 300 வேலை வாய்ப்புகள் இருந்தன. அதில் 194 இடங்கள் ஐஐடி மாணவர்களால் நிரப்பப்பட்டது. இதில் மாணவர் ஒருவருக்கு ரூபாய் 3.7 கோடி ஆண்டு சம்பளத்தில் சர்வதேச நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் அதிக சம்பளம் பெறுபவர் என்னும் சாதனையை ஐஐடி பம்பாய் இன்ஸ்டிட்யூட் மாணவர் பெற்றுள்ளார். இதேபோன்று உள்நாட்டு வேலை வாய்ப்பு மூலம் ரூபாய் 1.7 கோடி ஆண்டு சம்பளத்தில் ஒரு மாணவருக்கு வேலை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூன் வரை நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூ முகாம்களில் மொத்தம் 274 மாணவர்கள் பதிவு செய்து அதில் 1845 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1516 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu