கர்நாடக மாநிலத்தில் கிளாஸ் ஆன் வீல்ஸ் என்ற பெயரில் குளிரூட்டப்பட்ட சொகுசு டிஜிட்டல் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் 2013ஆம் ஆண்டு வாட்ஸப் குழு தொடங்கப்பட்டு இதன் மூலம் பல ஆண்டுகளாக சமூக சேவை செய்யப்பட்டு வருகிறது. இதில் கிராமப்புற குழந்தைகளுக்காக ஒரு புதிய தொழில்நுட்பத்தில் க்ளாஸ் ஆன் வீல்ஸ் என்ற பெயரில் குளிரூட்டப்பட்ட சொகுசு டிஜிட்டல் பேருந்து ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த பேருந்து முழு கணினி வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 16 மாணவர்கள் ஒரே நேரத்தில் படிக்க 16 லேப்டாப், கம்ப்யூட்டர்கள், கீபேட், மவுஸ், சுழலும் நாற்காலிகள் ஆகியவை உள்ளன. இது தவிர ஆசிரியர்களுக்கு தனிக் கணினி, நாற்காலி, மேஜையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ப்ரொஜெக்டர், சவுண்ட் சிஸ்டம், வைபை, ஆன்லைன் கல்விக்கான இணையம், கலர் பிரிண்டர், ஜெராக்ஸ் மெஷின் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆண்டுக்கு 5000 குழந்தைகளுக்கு டிஜிட்டல் பஸ் மூலம் கணினி கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.














