சென்னையில் புது நவீன விமான முனையம் டிசம்பரில் திறப்பு

November 17, 2022

சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன விமான முனையம் அடுத்த மாதம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி 2018 செப்டம்பரில் துவங்கியது. மொத்தம் 2.36 லட்சம் சதுர மீட்டரில் அமையும் முனையம் வாயிலாக, ஆண்டுதோறும் 1.7 கோடியில் இருந்து 3.5 கோடி பயணியர் பயன்பெறுவர். இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், சென்னை விமான நிலைய இயக்குனர் தலைமையில் விமான நிறுவனங்களின் […]

சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன விமான முனையம் அடுத்த மாதம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி 2018 செப்டம்பரில் துவங்கியது. மொத்தம் 2.36 லட்சம் சதுர மீட்டரில் அமையும் முனையம் வாயிலாக, ஆண்டுதோறும் 1.7 கோடியில் இருந்து 3.5 கோடி பயணியர் பயன்பெறுவர்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், சென்னை விமான நிலைய இயக்குனர் தலைமையில் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள், சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகள் உட்பட, பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், புதிய நவீன முனையம் அடுத்த மாதம் கண்டிப்பாக திறக்கப்படும். அப்போது, அடுக்கு மாடி வாகன நிறுத்தமும் திறக்கப்படும் என உறுதி அளித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu