கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் உருவாகி வருகிறது இதில் பயணிகள் வந்து செல்லும் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் புதிய பெரிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இது கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு மாற்றாக செயல்பட உள்ளது. இங்கு இருந்து தென்மாவட்டங்களுக்கு அனைத்து பஸ்களும் இயக்கப்படும். இதன் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் சி. என்.டி.ஏ சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையத்திற்கு பயணிகள் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து தெற்கு ரயில்வே இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதை அடுத்து ரூபாய் 20 கோடி மதிப்பில் புதிய ரயில் நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதில் மூன்று நிலைகள் அமைக்கப்பட உள்ளன. இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்த பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.