மெட்ரோ ரயில் நிறுவனம் முதன் முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையை பயன்படுத்தி சாதனை படைத்துள்ளது.
இந்திய மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் முதன்முதலாக மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புல்லர் ஆக்சில் முறையை பயன்படுத்தி உள்ளது. இது நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 20 மீட்டர் உயரத்திற்கு 30 மீட்டர் யூ கர்டரை கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இது மெட்ரோ ரயில் மைக்கல்லில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளது. இதற்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மெட்ரோ ரயில்களுடன் ஒப்பிடும்போது இதுவே மிக நீளமான ' யூ' கட்டர் ஸ்பானாக உள்ளது. இந்த கனரக வாகனமானது 12 அச்சுகளில் தலா 8 டயர்களுடன் மொத்தம் 96 டயர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.