30 நிமிடத்தில் 102 மாணவர்கள் தற்காப்பு கலைகளில் சாதனைப் படைத்தனர்
கல்பாக்கம் அருகே உள்ள சதுரங்கபட்டினம் டச்சுக்கோட்டை கடற்கரையில், மார்ஷியல் அரிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடெமி இன்டர்நேஷனல் ஏற்பாட்டில், குலோபல் வேல்டு ரெக்கார்ட் அமைப்பின் அதிகாரி ராஜேஸ்குமாரின் முன்னிலையில் 30 நிமிடங்களில் 3 வயதிலிருந்து 20 வயது வரையிலான 102 மாணவர்கள் தற்காப்பு கலைகளான சுருள் வாள் வீச்சு, வேல்கம்பு, வாட்டர் பேலன்ஸ், பைட்டிங் ஸ்டிக், சிலம்பம் ஒற்றை மற்றும் இரட்டை சுற்று ஆகியவற்றை திறம்படக் காட்டினர். நிகழ்ச்சி முடிவில், பங்கேற்ற மாணவர்களுக்கு மற்றும் பயிற்சி பள்ளிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. மாமல்லன் தெக்கன்களரி ஆசான் அசோக்குமார், ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா, மற்றும் திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.