தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மேலும் விரிவுபடுத்த திட்டம்

தமிழகத்தில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மேலும் விரிவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகையில் புதிய பயனாளிகள் சேர்க்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை அச்சடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இம்முறை கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும், கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் […]

தமிழகத்தில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மேலும் விரிவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகையில் புதிய பயனாளிகள் சேர்க்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை அச்சடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இம்முறை கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும், கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதன்படி இந்த முறை முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு, முன்னாள் மாநகராட்சி ஊழியர்களின் மனைவி, புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், புதிதாக திருமணமான பெண்களுக்கு பணம் வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu