ஒரு அரிய இளஞ்சிவப்பு வைரமானது ஹாங்காங்கில் நடைபெற்ற ஏலத்தில் கிட்டத்தட்ட 58 மில்லியன் டால௫க்கு விற்கப்பட்டது. இந்த விலை இதுவரை எந்த வைரத்திற்கும் செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இளஞ்சிவப்பு வைரங்கள் மிகவும் அரிதானவை. ஆகையால் உலக சந்தையில் அதன் மதிப்பு அதிமாகும். அந்த வகையில் 11.15 காரட் மதிப்புள்ள வில்லியம்சன் பிங்க் ஸ்டார் ஹாங்காங்கில் 57.7 மில்லியன் டாலர் மதிப்பைப் பெற்றுள்ளது. இந்த விலையானது மதிப்பிடப்பட்ட 21 மில்லியன் டாலர் விற்பனை விலையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த தொகை இதுவரை நகைக்கு ஏலத்தில் செலுத்தப்பட்ட இரண்டாவது மிக உயர்ந்த விலை என்று ஒ௫ செய்தி அறிக்கை கூறியது. இதற்கு முன்பு CTF பிங்க் ஸ்டார் என்று அழைக்கப்படும் இளஞ்சிவப்பு வைரம் ஹாங்காங்கில் 2017 ஆம் ஆண்டில் 71.2 மில்லியனுக்கு விற்கப்பட்டது . இது உலக சாதனை படைக்கப்பட்டது. சாதனை படைத்த CTF பிங்க் ஸ்டார் மற்றும் வில்லியம்சன் ஸ்டோன், 23.6 காரட் வைரம் 1947 இல் ராணி எலிசபெத் II க்கு திருமண பரிசாக வழங்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
இதற்கிடையில் இந்த விற்பனையானது ஆசியாவில் சிறந்த தரமான வைரங்களுக்கு சான்றளிப்பது மட்டுமல்லாமல், இளஞ்சிவப்பு வைரங்களின் தட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது என்று Sotheby’s Asiaவின் தலைவர் வென்ஹாவ் யூ கூறினார்.