கோவாக்ஸின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வறிக்கைக்கு கண்டனம்

ஐ.சி.எம்.ஆர் கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பின் அது உலகளவில் பரவி பல லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் அதற்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்திய பின்னர் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. அதன்படி இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பு ஊசிகள் பயன்படுத்தப்பட்டன. இதனிடையே கோவிஷீல்டு தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில் ரத்த உறைவு, ரத்த […]

ஐ.சி.எம்.ஆர் கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பின் அது உலகளவில் பரவி பல லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் அதற்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்திய பின்னர் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. அதன்படி இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பு ஊசிகள் பயன்படுத்தப்பட்டன. இதனிடையே கோவிஷீல்டு தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில் ரத்த உறைவு, ரத்த தட்டுகளின் எண்ணிக்கை சரிவு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என சமீபத்தில் அஸ்ட்ரோஜனக்கோ நிறுவனம் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சந்தைகளில் இருந்து இந்த தடுப்பூசி திரும்ப பெறப்பட்டது. இதனை தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசி குறித்து ஒரு ஆய்வறிக்கையை பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சமர்ப்பித்தது. அதில் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு எதிர்மறை விளைவு ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பிழையானது என்றும், கோவாக்ஸின் செலுத்தியதால் பக்க விளைவுகள் என்று ஏற்பட்டது என்பதற்கு எந்த ஒரு தரவுகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu