அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 86.63-ஆக உயர்ந்தது.
பிப்ரவரி 11-ஆம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக சற்றே உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி, ரூபாய் 43 பைசா வீழ்ச்சி அடைந்து 87.92 ரூபாயாக இருந்தது. இதுவரை ரூபாய் இவ்வளவு வீழ்ச்சியை சந்தித்தது இல்லை. இதனை எதிர்கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி, அரசு வங்கிகளின் வழியாக டாலர்களை விற்று ரூபாயின் மதிப்பை உயர்த்த முயற்சித்தது. இதன் விளைவாக, இன்று (பிப்ரவரி 11) ரூபாய் 61 பைசா உயர்ந்து 86.63 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதுடன், கடந்த நவம்பர் 2022-க்கு பிறகு ரூபாயின் மதிப்பில் 1 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.