புதிய நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்களுக்கு தனித்தனி அலுவலகம்

November 23, 2022

புதிதாக கட்டப்படும் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து எம்.பி.,க்களுக்கும், 'எம்.பி.,க்கள் சேம்பர்ஸ்' எனப்படும் அதிநவீன வசதிகளுடன் கூடிய தனித்தனி அலுவலகங்கள் கட்டும் பணிகள் துவங்கி உள்ளன. புதுடில்லியில், அதிகார மையங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய நாடாளுமன்ற மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை 'சென்ட்ரல் விஸ்டா திட்டம்' என்ற பெயரில் சீரமைத்து, நவீன வசதிகளுடன் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் எம்.பி.,க்களுக்கு என தனி அலுவலகங்கள் கட்டும் திட்டத்தை தற்போது மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. எம்.பி.க்கள் சேம்பர்ஸ் என்ற […]

புதிதாக கட்டப்படும் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து எம்.பி.,க்களுக்கும், 'எம்.பி.,க்கள் சேம்பர்ஸ்' எனப்படும் அதிநவீன வசதிகளுடன் கூடிய தனித்தனி அலுவலகங்கள் கட்டும் பணிகள் துவங்கி உள்ளன.

புதுடில்லியில், அதிகார மையங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய நாடாளுமன்ற மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை 'சென்ட்ரல் விஸ்டா திட்டம்' என்ற பெயரில் சீரமைத்து, நவீன வசதிகளுடன் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் எம்.பி.,க்களுக்கு என தனி அலுவலகங்கள் கட்டும் திட்டத்தை தற்போது மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

எம்.பி.க்கள் சேம்பர்ஸ் என்ற பெயரில் துவங்கப்படவுள்ள இத்திட்டத்தின் மதிப்பீடு 1,435 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒப்பந்தம் கோருவோர் அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் உரிய விபரங்களை அனுப்பி வைக்கும்படி கூறப்பட்டுள்ளது. எம்.பி.,க்கள் சேம்பர்ஸ் கட்டுமானத்திற்காக தற்போதுள்ள டிரான்ஸ்போர்ட் பவன் மற்றும் ஷ்ரம் சக்தி பவன் ஆகிய இரு கட்டடங்களும் இடிக்கப்படும். இதே சர்வே எண்ணில் இயங்கும் பி.டி.ஐ., தலைமை அலுவலக கட்டடமும் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu