சென்னையில் பேருந்து, மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே இ-டிக்கெட் வசதி விரைவில் நடைமுறைக்கு வருகிறது.
இந்தியாவில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் ஒரே ஸ்மார்ட் அட்டையைப் பயன்படுத்தும் வசதி உள்ள நிலையில், இந்தியாவில் முதன்முறையாக செல்போன் செயலி மூலம் இ-டிக்கெட் பெற்று பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என 3 விதமான போக்குவரத்திலும் பயணிக்கும் வசதியை ஒருங்கிணைந்த சென்னை பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இதற்கான டெண்டர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். இதன் மூலம் மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட் முறை வரும் டிசம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.