சென்னையில் 35,588 சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
சென்னை மாநகராட்சி பகுதியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாம் நாளை முதல் 30ம் தேதி வரை அனைத்து மண்டலங்களில் நடைபெறும். இந்த அடையாள அட்டைகள், சிப் (CHIP) மற்றும் QR குறியீடு (QR CODE) உட்பட இணைய இணைப்பு வசதி கொண்டதாக இருக்கும்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வியாபாரிகள் ஆதார் அட்டை, பழைய அடையாள அட்டை மற்றும் கைபேசி கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.