அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்

March 27, 2023

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 24-ந் தேதி அங்கு கடுமையான புயல் வீசி கனமழை பெய்தது. இதில் மிசிசிப்பியில் உள்ள கரோல், ஹம்ப்ரீஸ், மன்ரோ மற்றும் ஷார்கி ஆகிய நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. அங்கு பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். இதனால் அங்கு மக்களின் இயல்பு […]

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 24-ந் தேதி அங்கு கடுமையான புயல் வீசி கனமழை பெய்தது. இதில் மிசிசிப்பியில் உள்ள கரோல், ஹம்ப்ரீஸ், மன்ரோ மற்றும் ஷார்கி ஆகிய நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. அங்கு பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனத்தை அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று அறிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu