ஆவின் வாடகை வாகன உரிமையாளர்கள் திடீர் போராட்டம்

திருச்சியில் ஆவின் வாடகை வாகன உரிமையாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் ஆவின் பால்பண்ணை நிறுவனம் ஒரு நாளிற்கு காலை மட்டும் ஒரு லட்சத்து பத்தாயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்கிறது. இந்த பால் பாக்கெட்டுகள் ஆவின் நிறுவன வாகனங்கள் மட்டுமன்றி வாடகை வாகனங்கள் மூலமாகவும் மாவட்ட முழுவதும் ஏஜென்ட்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் 46 வேன்,டெம்போ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாகனங்களுக்கான நிலுவைத் தொகையை ஆவின் நிறுவனம் கடந்த […]

திருச்சியில் ஆவின் வாடகை வாகன உரிமையாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் ஆவின் பால்பண்ணை நிறுவனம் ஒரு நாளிற்கு காலை மட்டும் ஒரு லட்சத்து பத்தாயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்கிறது. இந்த பால் பாக்கெட்டுகள் ஆவின் நிறுவன வாகனங்கள் மட்டுமன்றி வாடகை வாகனங்கள் மூலமாகவும் மாவட்ட முழுவதும் ஏஜென்ட்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் 46 வேன்,டெம்போ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாகனங்களுக்கான நிலுவைத் தொகையை ஆவின் நிறுவனம் கடந்த 45 நாட்களாக தராமல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் இன்று காலை திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .அதனை தொடர்ந்து ஆவின் நிர்வாகம் தங்களுக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் சில வாடகை ஆட்டோக்கள் மூலம் பால் சப்ளை செய்தனர். இருப்பினும் ஆவின் ஏஜெண்டுகளுக்கு பெரும்பாலான பால் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் திருச்சி மாநகரில் காலை ஆவின் பாலிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து ஆவின் நிறுவன துணை பொது மேலாளர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu