விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வீட்டில் வருமானவரித்துறையினர் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக சிதம்பரத்தில் ஒரு வீட்டில் தங்கி தேர்தல் பிரச்சாரம் மற்றும் பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 6:30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் வீட்டின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.இது மறைமுகமாக அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல் என தொல். திருமாவளவன் கூறி உள்ளார்.