ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள லெனின்கிராட் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள "மெகா கிம்கி" என்ற மிகப் பெரிய ஷாப்பிங் சென்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்து சுமார் 150 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இந்த தீ விபத்தில் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. அங்குள்ள OBI ஸ்டோர் கட்டிடம் முழுவதும் இந்த தீ விபத்தில் அழிந்துள்ளது.