சால்டோ டி காஸ்ட்ரோ என்பது ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு கிராமம். 44 வீடுகள், ஒரு விடுதி, ஒரு தேவாலயம், ஒரு பள்ளி, ஒரு நீச்சல் குளம் உள்ள இந்தக் கிராமம் தற்போது விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இந்த இடத்தை முன்பு ஒருவர் வாங்கியிருந்தார். இப்பொது அவர் விற்க உள்ளார்.
அந்தக் கிராமத்தின் விலை 6.5 மில்லியன் யூரோ (ரூ.54 கோடி) ஆகும். ஸ்பெயின் நாட்டின் ரியல் எஸ்டேட் தளத்தில் இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ‘நான் நகரவாசியாக உள்ளேன். என்னால் அந்தச் சொத்தை பராமரிக்க முடியவில்லை. அதனால் விற்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். தனித்துவிடப்பட்ட, போதிய வசதிகள் இல்லாத கிராமத்தை அந்தத் தொகை கொடுத்து வாங்க யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், தற்போது அந்தக் கிராமத்தை வெறும் 260,000 யூரோவுக்கு (ரூ.2.1 கோடி) விற்பதாக அறிவித்துள்ளார்.
பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், ரஷ்யா என வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 பேர் இந்தக் கிராமத்தை வாங்க விரும்பம் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் மொத்த பணத்தையும் செலுத்தி இந்தக் கிராமத்தை வாங்க முன்பதிவும் செய்துவிட்டார்.