ஓசூர் அருகே 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வனவிலங்கு சரணாலயம்

November 8, 2022

ஓசூர் அருகே வனவிலங்கு சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டின் 17-வது வனவிலங்கு சரணாலயமாக 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்த சரணாலயமானது அமைய உள்ளது. இந்த பகுதியில் பல்வேறு விதமான உயிரினங்கள் உள்ளது. குறிப்பாக யானைகள் உள்ளிட்ட 35 விலங்கினங்கள் உள்ளது. அதே போல் 238 பறவையினங்கள் உள்ளது. பல்வேறு விதமான உயிரினங்கள் இருப்பதன் […]

ஓசூர் அருகே வனவிலங்கு சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டின் 17-வது வனவிலங்கு சரணாலயமாக 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்த சரணாலயமானது அமைய உள்ளது.

இந்த பகுதியில் பல்வேறு விதமான உயிரினங்கள் உள்ளது. குறிப்பாக யானைகள் உள்ளிட்ட 35 விலங்கினங்கள் உள்ளது. அதே போல் 238 பறவையினங்கள் உள்ளது. பல்வேறு விதமான உயிரினங்கள் இருப்பதன் காரணமாக அதனை பாதுகாக்கும் பொருட்டு இதனை காவிரி படுக்கையின் சரணாலயமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தை அமைப்பதற்கான ஒப்புதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அங்குள்ள உயிரினங்கள் பாதுக்காக்கப்படுவதோடு, அதனை வளர்ப்பதற்கான ஒருவாய்ப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu