விளையாட்டு துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்கப்படுகிறது.
தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது விளையாட்டு துறைக்கு அதி நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி விளையாட்டு துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்கப்படுகிறது. இதில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுகள் நடத்தப்படும்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், அரசின் சின்ன சின்ன திட்டங்களை கண்காணிக்க நடந்த ஆய்வின் போது, உலகத்தர விளையாட்டு நகர திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.