பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்று மாணவர்களுக்கான ஆதார் பதிவு முகாம் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு, விலை இல்லா பாடப்புத்தகங்கள், பேருந்து பயண அட்டை மற்றும் மிதிவண்டி போல பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு மாணவர்களின் ஆதார் எண் அவசியம் ஆகிறது. எனவே பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்று சிறப்பு முன்னறிவிப்பின் கீழ் அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டின் பள்ளி தொடக்க நாளான ஜூன் 6-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாரங்களிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு முகாம் நடத்தப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது