தட்கல் டிக்கெட்டுக்கு இனி ஆதார் கட்டாயம்! – போலி கணக்குகளை நீக்கிய ரெயில்வே அதிரடி

பயணிகளின் சிரமத்தை தவிர்க்க, ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகள் ஆதார் மூலம் உறுதி செய்யப்படும் புதிய நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் போலி கணக்குகள் காரணமாக தட்கல் முன்பதிவில் பயணிகள் சிக்கலுக்கு உள்ளாகி வந்தனர். இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் 2.5 கோடி போலி கணக்குகளை நீக்கி, ஜூலை 1 முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என அறிவித்தது. இன்று முதல், ஆதார் உறுதிப்படுத்திய பயனாளர்கள் மட்டுமே தட்கல் […]

பயணிகளின் சிரமத்தை தவிர்க்க, ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகள் ஆதார் மூலம் உறுதி செய்யப்படும் புதிய நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் போலி கணக்குகள் காரணமாக தட்கல் முன்பதிவில் பயணிகள் சிக்கலுக்கு உள்ளாகி வந்தனர். இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் 2.5 கோடி போலி கணக்குகளை நீக்கி, ஜூலை 1 முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என அறிவித்தது. இன்று முதல், ஆதார் உறுதிப்படுத்திய பயனாளர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் பதிவு செய்ய இயலும். பயனர் அடையாளத்தை உறுதி செய்ய, ஆதாருடன் சேர்த்து அரசு அங்கீகரித்த பிற அடையாள ஆவணங்களும் விரைவில் ஏற்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது, பாதுகாப்பான பயண முன்பதிவுக்கு வழிவகுக்கும் மாற்றம் என பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu