ஆதார் பிறந்த தேதிக்கான ஆதாரம் ஆகாது - இபிஎஃப்ஓ அறிவிப்பு

January 19, 2024

பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை இனி ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து பிறந்த தேதிக்கான அடையாளமாக இனி ஆதார் அட்டை ஏற்கப்படாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. மேலும் பிறந்த தேதியில் ஏதேனும் திருத்தங்கள் செய்வதற்காக உள்ள ஆவணங்களின் பட்டியலில் இருந்தும் ஆதார் நீக்கப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2023 டிசம்பர் அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், அங்கீகாரத்திற்கு உட்பட்டு […]

பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை இனி ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து பிறந்த தேதிக்கான அடையாளமாக இனி ஆதார் அட்டை ஏற்கப்படாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. மேலும் பிறந்த தேதியில் ஏதேனும் திருத்தங்கள் செய்வதற்காக உள்ள ஆவணங்களின் பட்டியலில் இருந்தும் ஆதார் நீக்கப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2023 டிசம்பர் அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், அங்கீகாரத்திற்கு உட்பட்டு ஒரு தனி நபரின் அடையாளத்தை அறிந்து கொள்வதற்கு ஆதாரங்களை பயன்படுத்தலாம். ஆனால் பிறந்த தேதிக்கான ஆதாரமாக அதனை கருத முடியாது என்று கூறி இருக்கிறது. இதனால் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல், பான் அட்டை போன்ற பல்வேறு ஆவணங்கள் பிறந்த தேதிக்கான சரியான ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu