புதுச்சேரியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்போடு ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை கட்டாயமாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் மின் இணைப்போடு ஆதார் எண் கட்டாயமாக்கப்படவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதே போலவே தற்போது புதுச்சேரியிலும் மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது.
ஆதார் எண் இணைக்க வேண்டும் அல்லது அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணம் ஆதார் எண்ணிற்கு பதிலாக மின் இணைப்போடு இணைக்கப்படலாம் என்கிற ஒரு வழிமுறையையும் புதுச்சேரி அரசு விதித்திருக்கிறது. மின் இணைப்பின் வழிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.