டெல்லி சமூக மேம்பாட்டுத்துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி சமூக மேம்பாட்டுத்துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் ஆம் ஆத்மி கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் , தனது பதவியை ராஜினாமா செய்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ஆம் ஆத்மி கட்சி ஊழலை எதிர்த்து போராட பிறந்தது. ஆனால் கட்சி ஊழலில் சிக்கி தவிக்கின்றது. ஊழலில் தனது பெயரை இணைக்க முடியாது என்பதால் அமைச்சர் பதவி மற்றும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.மேலும் தனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.