டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, பா.ஜனதா கட்சிகள் ஒரே நாளில் போராட்டம் அறிவித்துள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஹரியானா மேயர் தேர்தலில் பாஜக முறை கேட்டில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து பாஜகவை கண்டித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது. அதேபோன்று அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதாக பாஜக அறிவித்தது. இரண்டு கட்சிகளும் ஒரே நேரத்தில் போட்டி போராட்டம் நடத்துவதால் டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.