டெல்லி மாநகராட்சி தேர்தலில் 126 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது .709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் இதில் போட்டியிட்டனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன.
250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சியை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 126 வார்டுகளிலும், பாரதிய ஜனதா கட்சி 97 வார்டுகளிலும், காங்கிரஸ் 7 வார்டுகளிலும் வெற்றிபெற்றது. 2007 முதல் 3 முறை வென்று டெல்லி மாநகராட்சியை பாஜக தக்க வைத்த நிலையில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றுள்ளது.