ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை

ஏப்ரல் 29, 2022ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழவி௫க்கிறது.

ஏப்ரல் 29, 2022ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழவி௫க்கிறது. அதாவது கிரகணம் தொடங்கும் நேரத்தில், சந்திரன் சூரியனின் சில பகுதிகளை மறைக்கும் மற்றும் முற்றிலும் இருட்டாகக் காண்பிக்கப்படும். அதாவது, சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் பூமியிலிருந்து விலகி எதிரேயுள்ள சந்திரனின் துண்டுப் பகுதியை சூரியன் ஒளிரச் செய்யும். மேலும் கிரகணம் ஒரு பகுதியளவு மற்றும் நான்கு மணி நேரம் வரை நீடிக்கும். இது இந்த ஆண்டு இந்தியாவைத் தவிர பூமியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பார்க்கப்படும், இந்த சூரிய கிரகணத்தை வானியலாளர்கள் ‘பிளாக் மூன்’ என்று கூறுகின்றனர். அதாவது ‘கருப்பு நிலவு’ என்பது சந்திரன் “இருட்டாக” இருக்கும் அமாவாசை நிலையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தென் அமெரிக்கா, அண்டார்டிகா, பசிபிக் மற்றும் தெற்கு பெருங்கடல்கள், சிலி, அர்ஜென்டினா, உருகுவேயின் பெரும்பாலான பகுதிகள், மற்றும் மேற்கு பராகுவே, தென்மேற்கு பொலிவியா, தென்கிழக்கு பெரு அதனுடன் தென்மேற்கு பிரேசிலின் ஒரு சிறிய பகுதிகள் ஆகியவை இந்த கிரகணத்தை ஓரளவு காண முடியும் என்று வானியலாளர்கள் ௯றுகின்றனர்.

0
1
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu