தமிழகத்தில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் தயாரிப்பு 25ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் ஆவின் வினியோகம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதில் சென்னையில் மட்டும் 14.75 லட்சம் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் நான்கு வகை பால்களை விநியோகம் செய்கிறது. இதில் பச்சை நிற பாக்கெட் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மொத்த ஆவின் விற்பனையில் பச்சை நிற பால் பாக்கெட் 40 சதவீதம் இடம் பெற்றுள்ளது. இது லிட்டருக்கு 44 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது செலவை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் விற்பனையை நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி பச்சை நிற பால் பாக்கெட் வருகிற 25 ஆம் தேதி முதல் சில்லறை விற்பனை நிறுத்தப்படும். மேலும் பச்சை நிற பால் அட்டைதாரர்கள் டிசம்பர் 15 ஆம் தேதி வரை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.